இனிமே இதுதான் எங்க முடிவு..!! திரையரங்க உரிமையாளர்களுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கிடுக்குப்பிடி..!!

Published : Sep 09, 2020, 12:15 PM IST
இனிமே இதுதான் எங்க முடிவு..!! திரையரங்க உரிமையாளர்களுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கிடுக்குப்பிடி..!!

சுருக்கம்

திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே Digital Projectorகளை அமைத்து கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள் தான் செலுத்த வேண்டும். 

சென்னை, செங்கல்ப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் சார்பில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  அதன் முழு விவரம்:-  

QUBE, UFO, SCRBBLE நிறுவனங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை 

1. திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே Digital Projectorகளை அமைத்து கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள்தான்செலுத்தவேண்டும். 

 

2.VPF Charges என்ற பெயரியில் தயாரிப்பாளர்களிடம், விநியோகஸ்தர்களிடம் எந்த தொகையும் பெறக்கூடாது மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடி இங்கிருந்து செலுத்தப்பட்டுள்ளது.

 3.மேலும் உலகம் முழுவதும் VPF கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்த கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

4. இதை ரத்து செய்வதன் மூலம் சிறிப படத்தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பிரதிகளுக்கு ரூபாய் 25 லட்சங்கள், பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு சுமார் 500 பிரதிகளுக்கு ரூபாய் 1 கோடி 25 லட்சங்கள், 1000 பிரதிகளுக்கு ரூபாய் 2 கோடி 50 லட்சங்கள் வரை படத்தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பல கோடி ரூபாய் இதன் மூலம் பயன் அடையலாம். எனவே வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் VPF தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது என்ற கோரிக்கையினை வைக்கின்றோம். 

தேவைப்பட்டால் படத்தின் பிரதியை Hard Diskல் கொடுத்து விடுகின்றோம். அதற்கான செலவு குறைந்தது ரூபாய் 500/- முதல் 1000/- வரை தான் ஆகும். அதனை நாங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கலந்து பேசி ஏற்றுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி கோரிக்கையினை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சரியானது என்று கருதும் இந்திய அளவில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தங்களின் கருத்தினை சென்னை, செங்கல்ப்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம். (Mail ID -cktdfdass@gmail.com)என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!