யாரின் அழுத்தத்திற்கும் அடிபணிகிற ஆட்சி இது அல்ல. பாஜகவை எகிறி அடித்த அமைச்சர் சேகர் பாபு.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2021, 2:20 PM IST
Highlights

யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிகிற ஆட்சி இது அல்ல என்றார். ஆனால் இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் கூறுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, கோயிலை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது, கனிந்த கனியை தடியால் அடித்து விழ வைப்பது போல் அவர்கள் கருத்து இருக்கிறது எனக் கூறினார்.

கோயில்களில் சாமிக்கு ஆரத்தி காட்டுவது, பிரசாதம் வழங்குவது, போன்றவற்றை கோயில் நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அதேவேளையில் கோயிலை வைத்து பாஜக அரசியல் செய்யக்கூடாது என்றும், யாரின் அழுத்தத்திற்கும் அடிபணிகிற ஆட்சி இது இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் கோயில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயில்கள் அனைத்து நாட்களும்  திறக்கப்படும் என அறிவித்த முதலமைச்சரை மக்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர். அதேநேரத்தில் கோவில்களில் கொரோனா தோற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதேபோல் கோவில்களில் சுவாமிகளுக்கு ஆரத்தி காட்டுவது, பிரசாதம் வழங்குவது, சாமி தரிசனம் செய்வது போன்றவற்றை கோவில் நிர்வாகிகள் முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கோவில்களை திறக்க பாஜக கொடுத்த அழுத்தத்தினால் தான் கோயில்கள் திறக்கப்பட்டதாக கூறுவது தவறு. கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்கு தான் அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்திய பின்னரே கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிகிற ஆட்சி இது அல்ல என்றார். ஆனால் இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் கூறுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, கோயிலை வைத்து யாரும் அரசியல் செய்யக்கூடாது, கனிந்த கனியை தடியால் அடித்து விழ வைப்பது போல் அவர்கள் கருத்து இருக்கிறது எனக் கூறினார்.
 

click me!