நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், காவல் ஆணையர்.. திடீரென அப்பலோவுக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்.!

Published : Oct 15, 2021, 12:55 PM IST
நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், காவல் ஆணையர்.. திடீரென அப்பலோவுக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்.!

சுருக்கம்

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண் அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கம் போல தனது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய அடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நெஞ்சுவலியால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடமும் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!