நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. எதுக்கு முதல்வருக்கு நன்றி.. அண்ணாமலை மீது கடுப்பான எஸ்.ஆர்.சேகர்?

Published : Oct 15, 2021, 01:43 PM ISTUpdated : Oct 15, 2021, 01:45 PM IST
நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. எதுக்கு முதல்வருக்கு நன்றி.. அண்ணாமலை மீது கடுப்பான எஸ்.ஆர்.சேகர்?

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இந்த 3 நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். கோயில்களை திறக்கக்கோரி பாஜகவினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். 

இது நமது போராட்டத்தின் வெற்றி. இதற்கு அரசுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே என்று பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இந்த 3 நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். கோயில்களை திறக்கக்கோரி பாஜகவினர் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். இதனிடையே, விஜயதசமி அன்று கோவில்களை திறக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 

இந்நிலையில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை பாஜக வரவேற்கிறது, நவராத்திரி காலமென்பதால் மக்கள் கோயிலுக்கு அதிகம் செல்ல விரும்புவர். அதை உணர்ந்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கதக்கது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றிகள் எனவும் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  தர்மம் நியாயத்திற்கு புறம்பாக இந்து கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு பூட்டியது தவறு. இப்போது திறந்திருப்பது நமது போராட்டத்தின் வெற்றி.  இதற்கு நன்றி அரசுக்கு தெரிவிப்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!