இது என்னடா தமிழகத்துக்கு வந்த சோதனை.. அடுத்த 5 நாட்களும் வச்சு செய்யுமாம்.. அலற போகுது இந்த 26 மாவட்டங்கள்.

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2021, 2:41 PM IST
Highlights

08.11.2021: தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.

தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (4.5 கிலோமீட்டர் உயரம்வரை) காரணமாக 06.11.2021: வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 07.11.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி  பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 

08.11.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

09.11.2021,: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

10.11.2021:   கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குறிஞ்சிப்பாடி (கடலூர்) 16, வடகுத்து (கடலூர்) 14, சிதம்பரம்  (கடலூர்) 11, தம்மம்பட்டி (சேலம்) 10, நெய்வேலி  (கடலூர்), கொத்தவச்சேரி (கடலூர்), தலா 9, புவனகிரி (கடலூர்) 8, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கலசப்பாக்கம்  (திருவண்ணாமலை)  தலா 7, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சின்னக்கல்லார்  (கோவை), திருமங்கலம் (மதுரை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஆடுதுறை  (தஞ்சாவூர்), மானாமதுரை (சிவகங்கை) , போடிநாய்க்கனுர் (தேனீ) தலா 6, பழனி  (திண்டுக்கல்) , மஞ்சளாறு (தஞ்சாவூர்) , அருப்புக்கோட்டை (விருதுநகர் ) , ஜெயம்கொண்டாம் (அரியலூர்)  தலா 5. திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) , ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 4, விருதுநகர் , வீரபாண்டி (தேனீ ), சென்னை விமான நிலையம்  (சென்னை), தேவகோட்டை (சிவகங்கை) , வேதாரண்யம் (நாகப்பட்டினம்) , ஆத்தூர்  (சேலம் ) , விருதாச்சலம் (கடலூர்), கடலூர் தலா 3  குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9 ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. ஆழ்கடலில் (வங்க கடல்) உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அரபிக்கடல் பகுதிகள் 06.11.2021, 07.11.2021: மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். 06.11.2021: கோவா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 06.11.2021, 07.11.2021: மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். 08.11.2021, 09.11.2021: மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்க கடல் பகுதிகள்: 06.11.2021, 07.11.2021: தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர- வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். 08.11.2021: தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.

09.11.2021, 10.11.2021: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். 10.11.2021- 12.11.2021: தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.

11.11.2021, 12.11.2021: தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

click me!