அடிவாங்காமல் போகமாட்டான் இந்த சீனாக்காரன்.. மீண்டும் இந்தியாவை வம்பிழுக்கும் ஜி ஜின் பிங்.. எல்லையில் 100 வீடு

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2021, 4:55 PM IST
Highlights

அமெரிக்காவின் இந்த அறிக்கை இந்தியாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1962 பேருக்கு முன்பிருந்தே இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையே இந்த பகுதியில் மோதல் இருந்து வருகிறது, கடந்த மாதம் கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று அங்கு செய்திகளை சந்திக்கையில்,

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பதற்றம் இருந்துவரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சீனா கட்டியிருப்பதாகவும், அங்கு ஒரு குட்டி கிராமத்தையே அது உருவாக்கி இருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீனாவின் இந்த முயற்சி அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும் அது கவலை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த நிலையில் இந்தியா மட்டும் கொரோனாவுடன் சேர்ந்து சீனா என்ற   தீய சக்தியையும் எதிர்த்து போராடிக் கொண்டிருந்தது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன ராணுவத்திற்கு ஏற்பட்ட மோதலில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேபோல சீன ராணுவ தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது, ஆனால் சீன தரப்பில் இருந்து அந்த உயிரிழப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை,கடந்த 1960 இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் கால்வாய் பள்ளத்தாக்கில்  கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மோதல் மிகப்பெரிய மோதலாக கருதப்பட்டது. அதாவது ஒட்டுமொத்த கால்வான் பள்ளத்தாக்கும் தங்களுக்கு சொந்தமான பகுதி என சீனா உரிமை கோரியது, ஆனால் அதை மறுத்த இந்தியா, அங்கு ஏராளமான ராணுவ வீரர்களை குவித்து சீனாவை எச்சரித்தது. அதைத்தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவானது, ஆனால் ஒருகட்டத்தில் இந்தியா இல்லையில் படைகளை குவித்ததால்  பதற்றமடைந்த சீனா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் விளைவாக பாங்காங்திசோ, கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இருநாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றன, ஆனாலும் சில நேரங்களில் சீனா இந்திய எல்லையில் அத்துமீறும் சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறது, இந்திய ராணுவம் எல்லையில் கண்கொத்தி பாம்பாக இருந்து எதிர்விளைவாற்றி வருகிறது, இரு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற்று விட்டாலும், எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படலாம் என்ற நிலையே தொடர்ந்து நீடிக்கிறது. அதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான  நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளை மிரட்டி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்நாடுகளை ஈடுபடுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடும்  முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சீனா, மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதாவது அருணாச்சலப்பிரதேச மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சிறிய கிராமத்தை நிர்மானித்துள்ளது, அங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அது கட்டி உள்ளதாகவும், புகைப்பட ஆதாரங்களை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வீடுகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டுக்குள் அருணாச்சல பிரதேசத்தில் 4.5 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளதாகவும், சீனாவை உள்ளடக்கிய ராணுவ முன்னேற்றங்கள் பற்றிய அமெரிக்க பாதுகாப்பு துறையின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. அதில் இந்தியா சீனாவுக்கு இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் சீனா அதிரடியாக 100 வீடுகளை கட்டி உள்ளது, மெக்மஹான் கோட்டிற்கு தெற்கு இந்திய எல்லைக்குள் சதுரமாக இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த புதிய சீன கிராமத்தின் இருப்பு பற்றி விவரங்கள்  செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் பென்டகன் தெரிவித்துள்ளது. விரைவில் இந்த கிராமத்தில் மக்களை குடியமர்த்த சீனா திட்டமிட்டுள்ளது என்றும், இந்த கிராமம் சாரீஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் இந்த அறிக்கை இந்தியாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1962 பேருக்கு முன்பிருந்தே இந்தியாவுக்கும் சீனவுக்கும் இடையே இந்த பகுதியில் மோதல் இருந்து வருகிறது, கடந்த மாதம் கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று அங்கு செய்திகளை சந்திக்கையில், இரட்டை பயன்பாட்டு எல்லை கிராமங்களில் சீனா தொடர்ந்து சாலைகளை நிர்மாணித்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பகு குறிப்பிடதக்கது. அதேபோல் தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் உட்கட்டமைப்பு அதிகரிக்கவும், பல பில்லியன் டாலர் பணத்தை அங்கு முதலீடு செய்யவும், அதில் எல்லையோர நகரங்களுக்கு பரந்த சாலை மற்றும் ரயில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்தியத்தில் 600க்கும் மேற்பட்ட முழுவளர்ச்சியடைந்த  கிராமங்களை உருவாக்கும் நோக்கில் சீனா செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

click me!