அதிமுகவில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக உதவிகரமாக உள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். திமுக ஆட்சிக்கு 21 மாதத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டன.
அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழக விவசாயிகளுக்கு தான் அதிகமாக பயிர் காப்பீடு பெற்று தரப்பட்டது. எழுதாத பேனாவை நினைவு சின்னமாக வைப்பதற்கு பதில் எழுதக்கூடிய பேனாவை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுக்கலாம். காவல்துறையினரின் ரோந்து வாகனத்தையே திருடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு உள்ளது. அதேபோல், கொலை, கொள்ளைஇ பாலியல் குற்றம், போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக உதவிகரமாக உள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் இழப்பீடு விவகாரத்தில் திமுக, எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசுகிறது என இபிஎஸ் கூறியுள்ளார்.