திருப்பரங்குன்றமும், திருவாரூரும் எனக்கு... மாமியார் வீடு உங்களுக்கு; அமைச்சரை டென்ஷனாக்கிய டிடிவி!

Published : Aug 22, 2018, 01:34 PM ISTUpdated : Sep 09, 2018, 07:39 PM IST
திருப்பரங்குன்றமும், திருவாரூரும் எனக்கு... மாமியார் வீடு உங்களுக்கு; அமைச்சரை டென்ஷனாக்கிய டிடிவி!

சுருக்கம்

மாமியார் வீட்டுக்கு யார் செல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் திருப்பரங்குன்றமும் கிடைக்காது, திருவாரூரும் கிடைக்காது எனக்கு திகார் ஜெயில்தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். 

மாமியார் வீட்டுக்கு யார் செல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் திருப்பரங்குன்றமும் கிடைக்காது, திருவாரூரும் கிடைக்காது எனக்கு திகார் ஜெயில்தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். அவர்கள் அணையபோகும் தீபங்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஆட்சி போகப்போகிறதே என்ற விரக்தியில் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். தமிழகத்தில் எதிராக குரல் கொடுத்தால் உடனடியாக போலீசாரை வைத்து மிரட்டுகின்றன. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது இடியமீன் ஆட்சி என்று விமர்சித்துள்ளார். எந்த நிமிடம் ஆட்சி பறிபோகுமோ என்ற பயத்தின் உச்சியில் இருப்பதால் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். மாமியார் வீட்டுக்கு யாரெல்லாம் போகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

 

தமிழக அமைச்சர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து இயற்கையே அஞ்சுகிறது என்று பேசியிருக்கிறார். அப்படியென்றால் ஜெயலலிதாவைவிட எடப்பாடி பழனிசாமி பெரியவரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு என்ற பெயரில் அடிமைகளின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என பொதுமக்கள் நினைக்கிறார்கள் என்றார். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!