அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடரும் சிக்கல்... ஆட்சிமன்றக்குழு தள்ளிவைப்பு..!

By vinoth kumarFirst Published Jan 4, 2019, 12:53 PM IST
Highlights

திருவாரூர் இடைதேர்தலுக்காக இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாலேயே அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்றைக்கு பதில் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நேற்று 52 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற இருந்தது. பின்னர் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை அறிவிக்கப்பட இருந்தது.

இந்நிலையில் அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் இன்றைக்கு பதில் நாளை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அமமுக வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகும் நிலையில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தள்ளிப்போகிறது. இது தொடர்பாக நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து கூறுகையில் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாலேயே அதிமுக ஆட்சிமன்றக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

click me!