உறவினர்களுக்கு டெண்டர் … அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்ட உயர்நீதிமன்றம் !!

Published : Jan 04, 2019, 12:11 PM ISTUpdated : Jan 04, 2019, 12:42 PM IST
உறவினர்களுக்கு டெண்டர் … அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்ட உயர்நீதிமன்றம் !!

சுருக்கம்

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்தாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து வரும் 23 ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள  அரசு கான்டராக்ட் பணிகள் கிடைக்க வழி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அவரது நண்பர்கள் இந்த ஊழல் வளையத்தில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.  அவர்கள் நிர்வகிக்கும் கேசிபி இன்ஜினீயர்ஸ், வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு கான்டராக்ட் பணிகளை வேலுமணி வழங்கியதாக கூறப்படுகிறது.

 

அமைச்சரின் சகோதரர் பி.அன்பரசனின் பி.செந்தில் அண்ட் கோ நிறுவனத்துக்கு ரூ.80 கோடி மதிப்பில் அரசு கான்டராக்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நட்பில் உள்ள ரஞ்சன் சந்திரசேகரின் கேசிபி இன்ஜினீயர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.150 கோடி மதிப்பில் அரசு கான்டராக்ட் பணிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

கன்ஸ்டரானிக்ஸ் இந்தியாவின் கிருஷ்ணகுமார் லட்சக்கணக்கான மதிப்பில் அரசு கான்டராக்ட் பணிகளை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாணைக்கு உத்தவிட வேண்டும் என வலியுறுத்தி  அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து  வரும் 23 ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் எஸ்..பி.வேலுணிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!
என் உத்தரவை யாரும் மதிக்கலை... பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்