தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணன்... திருவாரூர் மாவட்ட உடன்பிறப்புகள் அப்செட்...!

By Selva KathirFirst Published Jan 5, 2019, 9:51 AM IST
Highlights

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பூண்டி கலைவாணனை அறிவித்த நிலையில் அம்மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர் அப்ஷெட்டாகியுள்ளனர்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக பூண்டி கலைவாணனை அறிவித்த நிலையில் அம்மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர் அப்ஷெட்டாகியுள்ளனர்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட பூண்டி கலைவாணனை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. காரணம் இடைத்தேர்தலில்  செலவு செய்யும் அளவிற்கு அம்மாவட்டத்தில் தி.மு.கவில் சவுண்டான ஒரு நபர் இல்லை என்பது தான். மேலும் பூண்டி கலைவாணனை தவிர வேறு யாரையும் வேட்பாளராக அறிவிக்கவும் ஸ்டாலின் தயங்கியுள்ளார். 

திருவாரூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் தி.மு.க கைப்பற்றியது. இதற்கு மிக முக்கிய காரணம் பூண்டி கலைவாணன் தான். கலைஞருக்காக தொகுதியில் பம்பராக சுழன்று கலைவாணன் வேலை பார்த்தார். மேலும் பணத்தையும் கூட தண்ணீராக செலவழித்து தள்ளினார். இதனால் தான் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர் திருவாரூரில் வென்றார். 

ஆனால் திருவாரூர் மாவட்ட தி.மு.க.வினர் மத்தியிலும் சரி திருவாரூர் மக்கள் மனதிலும் சரி பூண்டி கலைவாணனுக்கு அவ்வளவு நல்ல பெயர் கிடையாது. தேர்தலில் கலைஞருக்கு செலவு செய்த தொகையில் 10 சதவீதத்தை கூட மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மற்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களக்கு கலைவாணன் செலவு செய்யவில்லை என்று அப்போதே முனுமுனுப்புகள் உள்ளன. மேலும் கொலை வழக்கு, அடி தடி வழக்கு உள்ளிட்டவற்றில் சிக்கியுள்ள பூண்டி கலைவாணன் தற்போது பெரும் கடனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் இடைத்தேர்தலுக்கு எப்படி கலைவாணன் செலவு செய்வார் என்று திருவாரூர் பகுதி தி.மு.க நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். மேலும் கலைவாணன் எப்போதுமே தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதை கலைவாணன் விரும்பியதே இல்லை என்கிறார்கள் திருவாருர் மாவட்ட தி.மு.கவினர். ஏனென்றால் பிரச்சாரம் செல்லும் போது அரசியல் எதிரிகளால் தனக்கு என்ன வேண்டும் ஆனால் நிகழலாம் என்கிற ஒரு அச்சம் கலைவாணனுக்கு எப்போதுமே உண்டு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

 

கலைஞர் தேர்தலில் நின்ற போது கூட, இரவாகிவிட்டால் கலைவாணன் வீட்டிற்குள் சென்று அடைந்துவிடுவார் என்கிறார்கள். இப்படி செலவு செய்யும் வகையிலும் சரி ஆக்டிவாக வேலை செய்ய வேண்டிய வகையிலும் சரி பூண்டி கலைவாணனுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ள நிலையில் மிக முக்கியமான இடைத்தேர்தலில் அவரை வேட்பாளராக்கியிருப்பது தவறான முடிவு என்று தி.மு.கவினர் முனுமுனுக்கின்றனர். மேலும் ஸ்டாலின் திருவாரூர் வேட்பாளர் குறித்து அம்மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது டி.ஆர்.பாலுவை தான் பலரும் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் டி.ஆர்.பாலு இடைத்தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்பதால் தான் வேறு வழியின்றி பூண்டி கலைவாணனை போட்டியிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்தி தற்போது ஏற்றுக் கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

click me!