திருவாரூர் வேட்பாளர்...! பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு தினகரன் விடுத்த சவால்..!!

By Selva KathirFirst Published Jan 5, 2019, 9:34 AM IST
Highlights

திருவாரூர் இடைத்தேர்தல் விவகாரத்தில் சசிகலாவிடம் தினகரன் விடுத்து வந்துள்ள சவால் தான் தற்போது அ.மு.மு.கவின் ஹாட் மேட்டர்.

திருவாரூர் இடைத்தேர்தல் விவகாரத்தில் சசிகலாவிடம் தினகரன் விடுத்து வந்துள்ள சவால் தான் தற்போது அ.மு.மு.கவின் ஹாட் மேட்டர்.

திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே காமராஜ் தான் வேட்பாளர் என்பதை தினகரன் உறுதிப்படுத்திவிட்டார். ஆனால் அறிவிப்பதற்கு முன்னதாக சசிகலாவின் ஒப்புதலை பெற்றாக வேண்டிய கட்டயாம் தினகரனுக்கு இருந்தது. 

இதனால் தான் அவசரமாக தினகரன் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாகவே சசிகலாவும் – தினகரனும் பேசியுள்ளனர். திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்பது தான் சசிகலாவின் நிலைப்பாடாக இருந்துள்ளது. மேலும் தற்போது திருவாரூர் தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவது அதிமுகவுடனான இணைப்பு முயற்சியை தாமதமாக்கும் என்று சசிகலா கருதியுள்ளார். 

எனவே ஆர்.கே.நகரை போல திருவாரூரில் எளிதாக வெற்றி கிடைத்துவிடாது, இந்த முறை எடப்பாடி பழனிசாமியும் சரி ஓ.பி.எஸ்சும் சரி சுதாரித்துவிடுவார்கள். மேலும் ஆர்.கே.நகரில் இருந்தது போல் திருவாரூர் அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் எதுவும் இல்லை. இதே போல் திருவாரூர் இடைத்தேர்தல் தி.மு.கவின் சுயமரியாதை தொடர்புடையது. எனவே கடந்த முறை நமக்கு உதவியது போல் இந்த முறை அ.தி.மு.கவிலும் சரி, தி.மு.கவிலும் சரி எந்த உதவியும் கிடைக்காது என்பதை சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் ஆர்.கே.நகரில் தேர்தலை பணிகளை ஒருங்கிணைத்து செய்தது போல் திருவாரூரில் செய்வது கடினம். ஆர்.கே.நகரை போல் அவ்வளவு எளிதாக வாக்காளர்களை அணுக முடியாது என்றும் சசிகலா கூறியுள்ளார். ஆட்சி அதிகாரம் இருக்கும் அ.தி.மு.க இந்த முறை மிருக பலத்தோடு தேர்தலை எதிர்கொள்ளும், எனவே விஷப்பரிட்சை வேண்டாம் என்று சசிகலா தினகரனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் ஆர்.கே.நகரில் பெற்ற ஓட்டை விட அதிக ஓட்டுகள் பெற்று திருவாரூரில் வெல்வது உறுதி. திருவாரூரை கைப்பற்றுவதற்கான பார்முலா ஏற்கனவே தயாராகிவிட்டது, எனவே திருவாரூரும் நமக்கு தான் என்று தினகரன் சசிகலாவிடம் கூறியதாகவும், ஆனால் சசிகலா இதனை ஏற்க தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக திருவாரூரில் மட்டும் தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறும், ஒரு வேளை தேர்தலில் தோற்றுவிட்டால் அ.தி.மு.கவுடனான இணைப்புக்கு நீங்கள் கூறுவதை கேட்பதாகவும் தினகரன் கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்தே வேறு வழியில்லாமல் தினகரன் திருவாரூருக்கு வேட்பாளரை அறிவிக்க வேண்டா வெறுப்பாக சசிகலா தலையை ஆட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் சசிகலாவிடம் தான் சவால் விட்டு வந்திருப்பதாகவும் எனவே திருவாரூரில் வெற்றியை எப்பாடு பட்டாவது பெற வேண்டும் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் தினகரன் கூறி வருகிறார்.

click me!