பயந்துபோன பாஜக... ஆர்.கே.நகர் அடியால் திருவாரூரில் புறக்கணிப்பு..!

By vinoth kumarFirst Published Jan 3, 2019, 10:03 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடமால் ஒதுங்கும் முடிவுக்கு பாஜக வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடமால் ஒதுங்கும் முடிவுக்கு பாஜக வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தேர்தலைச் சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளரை நாளை அறிவிக்க உள்ளன. தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி 6-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்திருந்தார். 

ஆனால், உண்மையில் திருவாரூரில் போட்டியிட  மாநிலத் தலைவர் தமிழிசைக்கு ஆர்வம் இருந்தாலும், மற்ற நிர்வாகிகளுக்கு இதில் உடன்பாடில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெற்றதால், இந்த முறையும் அதுபோன்ற ஒரு நிலைமையைச் சந்திக்க வேண்டாம் என்று நிர்வாகிகள் பாஜக மேலிடத்துக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.

 

இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தால், அது நாடாளுமன்ற கூட்டணிக்கு நாம் பேசி வரும் பேச்சுவார்த்தைக்கு இடையூராக அமையும் என்றும் மற்ற கட்சிகள்  நம்மிடம் கூட்டணி வைக்கவே யோசிக்கும்; அதனால் இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறையும் திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக நெகட்டிவ்வான அறிக்கையைத் தெரிவித்திருப்பதால், போட்டியிடாமல் தவிர்க்கலாம் என்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பாஜக முக்கியமான ஒரு காரணத்தை சொல்லி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் என்பதுதான் தற்போதைய நிலை. அடுத்த சில தினங்களில் ஏதேனும் மனமாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம்.

click me!