
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய முடி ஏலம்விடப்பட்டதில் 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்து 400 கிலோ முடி ஏலம் விடப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கையாக பல கோடி பணம் கொட்டு கொட்டு என்று கொட்டுகிறது. அதோடு பக்தர்கள் தங்களால் முடிந்தளவு ஏழுமலையானுக்கு தங்கமாகவோ, பணமாகவோ காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
பக்தர்கள் தாங்கள் காணிக்கையாக செலுத்தும் தலை முடி 50ஆயிரத்து 400 கிலோ தலைமுடி 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
இந்த தலைமுடி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது