"முதலமைச்சர் ஜெயலலிதாவை ஏன் பிரதமர் மோடி பார்க்க வரவில்லை" - மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறார் திருநாவுக்கரசர்

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 06:14 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
"முதலமைச்சர் ஜெயலலிதாவை ஏன் பிரதமர் மோடி பார்க்க வரவில்லை" - மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறார் திருநாவுக்கரசர்

சுருக்கம்

தமிழக முதல்வர் எம்ஜிஆர் , முதல்வர் ஜெயலலிதா ஆகீயொரிடம் காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்த கனிவு ஏன் பிரதமர் மோடிக்கு இல்லை என மீண்டும் முதல்வரை பார்க்க பிரதமர் வராத விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் திருநாவுக்கரசர்.

சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அப்போலோ வந்தார். இது பற்றி கருத்து தெரிவித்திருந்த திருநாவுக்கரசர் முதல்வரை பார்க்க பிரதமர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார். 

இது பற்றி ஆவேசமாக பதிலளித்த தமிழிசை சகோதரர் திருநாவுக்கரசர் அவர்கட்சி விவகாரங்களை மட்டும் பார்க்கட்டும் தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடவேண்டாம் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எது தேவையான விமர்சனம் என தெரிவித்தால் தாம் அதை செய்வதாக கிண்டலடித்திருந்தார். 

இந்நிலையில் மீண்டும் இதே பிரச்சனையை திருநாவுக்கரசர் கையில் எடுத்துள்ளார். இன்று சத்திய மூர்த்தி பவனில் பேட்டி அளித்த திருநாவுக்கரசர் மீண்டும் பிரதமர் மோடி பார்க்க வராதது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் கூறியதாவது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து நான் கூறிய சில கருத்துக்கள் அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் கூறப்பட்டதாக பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர். கடந்த காலங்களில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் இதே அப்போலோ மருத்துவமனையில் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார். 

அதேபோல, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கார் விபத்தில் காயமடைந்து சென்னை தேவகி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது ராஜீவ்காந்தி அவர்கள் நேரில் வருகை புரிந்து நலம் விசாரித்தார். 

இந்த அடிப்படையில் இன்றைய பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நலம் விசாரித்து தமிழக பா.ஜ.க.வினர் கூடுதல் அரசியல் நன்மை தேடலாமே ? ஏன் செய்யவில்லை ? இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!
இரண்டாவது முறையாக அப்பாவான சீமான்.! ரசிகர்கள் வாழ்த்து மழை.!