
கிராமப் புற மாணவர்களின் எதிர்காலம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. சமூக நீதிக்கு அடித்த சாவுமணி என்று நீட் தேர்வை தமிழக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்த்து வருகின்றனர்.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் நீட் தேர்வுநடைபெற்றுள்ள சூழலில், மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி அரசு இதுவரை அழுத்தம் திருத்தமான எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.
மாறாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று சாப்ஃட் கார்னரில் அரசு பதிலளித்து வருகிறது.
இந்தச் சூழலில் நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து எடப்பாடி அரசை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வகை தொகையாக விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் பலவீனமான தமிழக அரசால் மத்திய அரசை அணுகமுடியவில்லை என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறிய திருநாவுக்கரசர், இதனால் தமிழக கிராமப் புற மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்த நீட் தேர்வு விவகாரத்தில், அவரைப் பின்பற்றி ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசு மென்மையான போக்கை கையாண்டு வருவது ஏன் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி...