தேர்தலில் திமுகவை தோற்கடிக்க திட்டமிட்டோமா..? நடந்தது என்ன..? திருமாவளவன் கூறிய ரகசிய தகவல்

By Ajmal KhanFirst Published Oct 16, 2022, 10:59 AM IST
Highlights

மத வெறியின் மூலம் மக்களை பிரித்து அழிக்க நினைக்கிற நாசக்கார அரசியல் சங் பரிவாருடையது. இந்தியாவில் நடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் 18 குண்டுவெடிப்புகளில் நேரடித் தொடர்பு கொண்டது சங்கப்பரிவாரம் என திருமாவளவன் விமர்சித்தார்.

திமுகவை அழிக்க திட்டம்

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின்  தலைவராக மு.க. ஸ்டாலின் இரண்டாம் முறை பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சேகர் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது  கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், சனாதனக் கும்பலின் இலக்கே திமுகவை அழிக்க வேண்டும் என்பது தான். அதற்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது என கேட்டுக்கொண்டார்.  

சங் பரிவார் பேசும் அரசியலை எதிர்த்தால் நாம் ஏதோ இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக அவதூறு பரப்புகிறார்கள். நாம் இந்துக்களுக்கு எதிரி அல்ல. . இந்துச் சமூகம் மிகப்பெரிய சமூகம். இந்துக்கள் தான் நம் கட்சிகளில் நிறைந்து இருப்பதாக கூறினார்.  மத வெறியின் மூலம் மக்களை பிரித்து அழிக்க நினைக்கிற நாசக்கார அரசியல் சங் பரிவாருடையது. இந்தியாவில் நடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் 18 குண்டுவெடிப்புகளில் நேரடித் தொடர்பு கொண்டது சங்கப்பரிவாரம். பாசிசம் தான் ஆர்எஸ்எஸி-இன் கொள்கை" என தெரிவித்தார்.

 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது ஏன் எனவும் பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் விளக்கினார். "2016ல் நாங்கள் ஏதோ திமுகவிற்கு எதிராக சதி செய்வதற்காக நாங்கள் தனித்து நிற்கவில்லை என தெரிவித்தார். நாங்கள் அவ்வாறு சென்றதற்கான காரணம் ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.  2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே எங்களை அழைத்து நாங்கள் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடப் போகிறோம். வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக முடிவு செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.  இனி நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதனால் தான் நாங்கள் தனி கூட்டணியாக மக்கள் நல கூட்டணி அமைத்து போட்டியிட்டதாக  திருமாவளவன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

முதலமைச்சர் கனவு காணும் இபிஎஸ்...! சிறைக்கு செல்வது உறுதி- இறங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத்

click me!