முதலமைச்சர் கனவு காணும் இபிஎஸ்...! சிறைக்கு செல்வது உறுதி- இறங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத்

Published : Oct 16, 2022, 10:13 AM IST
முதலமைச்சர் கனவு காணும் இபிஎஸ்...! சிறைக்கு செல்வது  உறுதி- இறங்கி அடிக்கும் நாஞ்சில் சம்பத்

சுருக்கம்

அம்பானியின் கையில் டெலிகாம், அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில் திருவோடு என நாஞ்சில் சம்பத் விமர்சித்தார்.  

திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் இரண்டாம் முறை பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சேகர் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய  நாஞ்சில் சம்பத், உலகெங்கும் கச்சா எண்ணை விலை குறைந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதாக கூறினார். இதில் அடித்த கொள்ளை மட்டும் 29 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக குற்றம்சாட்டினார்.  அதானி, அம்பானி கும்பலுக்கு மட்டும் 12 லட்சம் கோடி கடன் தள்ளுபடி - இதற்காகவா நரேந்திர மோடிக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும்?

Rahul: Bharat Jodo Yatra:பாரத் ஜோடோ நடை பயணம்: ராகுல் காந்தி 1000 கி.மீ தொலைவை எட்டினார்

அம்பானியின் கையில் டெலிகாம், அதானியின் கையில் துறைமுகம், டாடாவின் கையில் ஏர்போர்ட் அரசின் கையில் ராமர் கோயில் இதனால் மக்களின் கையில் திருவோடு என விமர்சித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென கூறியவர், "அம்பேத்கர் பெயரில் அறக்கட்டளை தொடங்குவேன், அம்மா வங்கி அட்டை தருவேன், குடும்ப அட்டை அனைத்திற்கும் இலவச செல்போன், 2 துணைக்கோள் நகரங்கள், மோனோ ரயில் என அதிமுக அறிவித்த 100க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றவே இல்லை என தெரிவித்தார்.

 தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் இபிஎஸ்  பின்னாளில் முதலமைச்சர் என கனவு காணும் கண்டுகொண்டிருப்பதாக தெரிவித்தவர், ஆனால் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதியென குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

Chidambaram: இந்துத்துவா,இந்தித் திணிப்பு மட்டும் பட்டினியைப் போக்கிவிடுமா?பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!