திருமாவளவன் கூடியவிரைவில் பாஜகவில் இணைவார்..!வேல்யாத்திரையில் சபதமெடுத்திருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்

Published : Nov 10, 2020, 08:59 AM IST
திருமாவளவன் கூடியவிரைவில் பாஜகவில் இணைவார்..!வேல்யாத்திரையில்  சபதமெடுத்திருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன்

சுருக்கம்

பாஜகவில் திருமவளவன் இணையும் நாள் தமிழ் மண்ணில் கூடிய விரைவில் நடக்கும். ஜாதி அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் ஆப்பு வைப்பதாகவும், பாஜக கயிறுவாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேல் யாத்திரையின் போது தெரிவித்துள்ளார்.  

வேலூர் மாவட்டம்,வேலூர் மண்டிவீதியில் பாஜக சார்பில் வேல் யாத்திரை குறித்த கூட்டம் தடையை மீறி பாஜக மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கயிறுவாரிய தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசும் போது..., 'நான் தமிழக முதல்வர் பழனிசாமியை பார்த்து கேட்க விரும்புவது ஒன்றுதான் நீங்கள் மாவட்டம் மாவட்டமான செல்கிறீர்கள். அங்கு மக்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.

அங்கு 10 ஆயிரம் பேர் கூடுகிறார்கள். ஆனால் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார் பாஜக யாத்திரை தடைக்கு காரணம் கொரோனா பரவிவிட கூடாது என. ஆனால் பாஜகவின் நோக்கம் தமிழக அரசியலில் உள்ள கொரோனாக்களை அகற்றுவது தான். திருமாவளவன் பெரியார் பெயரை சொல்லி ஜாதி மறுப்பு அரசியல் இயக்கம் நடத்துவதாக சொல்கிறவர்.அவர் ஜாதி அரசியல் செய்கிறார்.எங்கள் தலைவர் முருகன் அந்த அடிப்படை வாதத்திற்கு ஆப்பு வைக்கும் அரசியல் தலைவராக உள்ளார்.

காலம் மாறிவிட்டது. திருமாவளவன் பாஜக இணையும் நாள் தமிழ் மண்ணில் உருவாகுமே தவிர தாமரையை வீழ்த்துகின்ற சக்தி என்றைக்கும் உருவாகாது. பாஜக வின் ஆணிவேரை தமிழ் மண்ணில் இருந்து அகற்ற சில சக்திகள் முயற்ச்சிக்கின்றன அரசியல் கட்சிகள் அதற்கு துணைபோகின்றது அதை தகர்ப்பதர்க்குதான் இந்த ரத யாத்திரை இது யாருக்கும் எதிரானது அல்ல என்றார்.

PREV
click me!

Recommended Stories

திமுக அரசில் 4 முதல்வர்கள்..! தேர்​தலின்​போது அமைச்​சர்​களுக்கு நேரப்போகும் கதி..! பகீர் கிளப்பும் இபிஎஸ்..!
பாஜகவுடன் நேருக்கு நேர் மோதல்.. விஜய் களமிறங்கும் தொகுதி இதுதான்... தவெகவின் ‘வி’ சென்டிமெண்ட்..!