ஜாம்பவான்களை திக்குமுக்காட செய்த நடராஜன்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Natarajan who stunned the heroes ... Chief Minister Edappadi Palanisamy congratulates

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல் 2020 தொடரில் சிறப்பான பந்துவீச்சை நடராஜன் வெளிபடுத்தியதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதுவே அவருக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அவருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.Natarajan who stunned the heroes ... Chief Minister Edappadi Palanisamy congratulates

சேலத்தை சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் அணி இறுதி ஓவர்களில் நடராஜனையே நம்பி உள்ளது. இறுதி ஓவர்களில் நடராஜன் வீசும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறி வருகின்றனர்.

Latest Videos

நடராஜன் வீசும் யார்க்கரில் சிக்கி பலமுறை பேட்ஸ்மேன்களை நிலைகுலைந்து உள்ளனர். நடராஜன் நடப்பு ஐ.பி.எல் சீசினில் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் இல் வெளிப்படுத்திய ஆட்டங்களால் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நேரடியாக 15 பேர் கொண்ட அணியிலும், நடராஜன் கூடுதல் பவுலராகவும் இந்திய அணிக்கு தேர்வாகியிருந்தனர். இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் அந்த இடம் நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடராஜனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கும் தமிழக முதல்வர் பழனிசாமி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காட செய்த நடராஜன் இந்திய அணிக்கு தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.நடராஜனின் சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற மனம்மார்ந்த வாழ்த்துக்கள் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image