#Biharelection2020: பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... இன்னும் சற்று நேரத்தில் முன்னிலை நிலவரம்...!

Published : Nov 10, 2020, 08:00 AM ISTUpdated : Nov 10, 2020, 08:14 AM IST
#Biharelection2020: பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... இன்னும் சற்று நேரத்தில் முன்னிலை நிலவரம்...!

சுருக்கம்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களமிறங்கினர். கொரோனா தொற்றுக்கு இடையே நடந்த இத்தேர்தலில் சராசரியாக 53 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின.

 
பீகாரில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சிராக் பஸ்வானும் களத்தில் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.


மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றும் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்ற முடியும். பெரும்பாலான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. எனவே, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பீகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே எழுந்துள்ளது. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிய வரும். பிற்பகலுக்குள் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற நிலவரமும் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!