ஈவேரா அடிக்கடி விபச்சாரிகள் வீட்டிற்கு சென்று வருவார்..! அந்த புத்தகத்துல இப்படி தான் இருக்கு எச். ராஜா..!

Published : Nov 09, 2020, 10:26 PM IST
ஈவேரா அடிக்கடி விபச்சாரிகள் வீட்டிற்கு சென்று வருவார்..! அந்த புத்தகத்துல  இப்படி தான் இருக்கு  எச். ராஜா..!

சுருக்கம்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வேல்யாத்திரையை திருத்தணியில் தடையை மீறி தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் பாஜக தலைவர் எல்.முருகன்.உடனே திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதை மீறி வேல் யாத்திரையை பாஜகவினர் நடத்திவருகின்றனர்.   

 காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, வேல் யாத்திரையை தொடங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையில் வேல் யாத்திரை தொடங்குவதற்கு முன்பு காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் ஹெச். ராஜா.., 
“சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழக தலைவர் ஈவேரா” என்ற புத்தகத்தில் 'ஈவேரா விபச்சாரிகள்' வீட்டிற்குள் தினசரி புகுந்து வருவார் என எழுதப்பட்டுள்ளது. விபச்சாரிகளின் வீட்டிற்கு ஈவேரா சென்று வருவதற்கு அவரது கூட்டாளிகள் உதவி செய்வார்கள். மேலும் காவிரி ஆற்றங்கரையில் ஈவேரா தனது கூட்டாளிகளோடுடன் சேர்ந்து விலைமாதர்கள் உடன் கும்மாளம் அடிப்பார் என்றும், தன் மனைவி நாகம்மையார் சமைத்த உணவை ஆற்றங்கரைக்கு கொண்டுவரும்படி சொல்லுவார் என்றும் “தமிழக தலைவர் ஈவேரா” என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து ஈவேரா பெண் அடிமைத் தனத்திற்கு போராடினாரா? அல்லது தன் மனைவியை அடிமையாக வைத்திருந்தாரா? என்கின்ற கேள்வி எழுகிறது” எனக் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?
ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!