தமிழகத்தில் பாஜக வால் ஆட்டினால்! ஒட்ட நறுக்குவோம்! மத்தவங்க செய்றாங்களோ இல்லையோ நாங்க செய்வோம்!திமிரும் திருமா

Published : Nov 02, 2022, 08:21 AM ISTUpdated : Nov 02, 2022, 08:27 AM IST
தமிழகத்தில் பாஜக வால் ஆட்டினால்! ஒட்ட நறுக்குவோம்! மத்தவங்க செய்றாங்களோ இல்லையோ நாங்க செய்வோம்!திமிரும் திருமா

சுருக்கம்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சனாதானத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ்ஐ அம்பலப்படுத்தும் முயற்சியாக நவம்பர் 6ம் தேதி மாநில முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். 

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன்;- இந்தியா முழுவதும் ஒரே தேசம் ஒரே கலாசாரம் கொண்டுவர துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்து மதத்திற்குள்ளேயே ஒரே கலாசாரத்தை கொண்டு வருமா? இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது. பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை இந்து தேசமாக கட்டமைக்க முயல்கிறது திருமா குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க;- ஆளுங்கட்சிக்கு காவடி தூக்கி.. ஜால்ரா அடிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. ஆளுநரை விமர்சிப்பதா? தேவநாதன் யாதவ்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் இனி ஒரு மொழிப்போர் நடக்கும் என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில்தான் நடைபெறும். இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவர் வீரவேல் குடும்பத்திற்கு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை பாராட்டுகிறோம். ஆனால், அதோடு நில்லாமல் அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

சனாதானத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ்ஐ அம்பலப்படுத்தும் முயற்சியாக நவம்பர் 6ம் தேதி மாநில முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார். மேலும், தமிழ்நாட்டிலும் பாஜக வாலாட்டுகிறது. தமிழ்நாட்டில் பாஜக வால் ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம். இதை மற்ற காட்சிகள் செய்கிறதோ இல்லையோ விசிக கண்டிப்பாக செய்யும் என திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.. ஆளுநரா இல்லை ஆர்.எஸ்.எஸ் தொண்டரா ? கொந்தளித்த திருமாவளவன்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி