அழைப்பு கொடுத்தும் வரவில்லை..! ஸ்டாலின் மீது வைகோ, திருமா அப்செட்..?

By Selva KathirFirst Published Feb 28, 2020, 10:27 AM IST
Highlights

இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகிகள் இணைந்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற புதிய அமைப்பை துவங்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தான் சென்னையில் நேற்று பிரமாண்ட குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க குடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சென்னையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்ற நிலையில் திருமாவளவன் மற்றும் வைகோ பங்கேற்கவில்லை.

இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகிகள் இணைந்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிற புதிய அமைப்பை துவங்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தான் சென்னையில் நேற்று பிரமாண்ட குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க குடியுரிமை சட்டத் திருத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் என அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு செய்திருந்தாலும் ஸ்டாலின் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்ததால் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் மாநாட்டை பிரமாண்டமாக்க கூட்டத்தை கூட்டினர். இதனால் யாரும் எதிர்பாரா அளவிற்கு மாநாட்டு திடல் நிரம்பி வழிந்தது.

ஸ்டாலின் மாநாட்டிற்கு வந்த நிலையில் அழைப்பு விடுத்தும் வைகோ வரவில்லை. அவருக்கு பதில் மல்லை சத்யா வந்திருந்தார். இதே போல் திருமாவளவன் வராத நிலையில் அக்கட்சியின் எம்பி ரவிக்குமார் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தார். வைகோ ஊரில் இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. அதே சமயம் திருமாவளவன் கன்னி மாடம் என்கிற சினிமாவை பார்த்த நிலையில் மாநாட்டிற்கு வரவில்லை. இது குறித்து விசாரித்த போது திமுக தலைமை மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருக்கலாம் என்று தெரிகிறது.

அதிலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் திமுக வேட்பாளர்களை கூட இறுதி செய்து வருவதாக சொல்கிறார்கள். மேலும் திமுக தனித்து போட்டியிடும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் முக்கிய கூட்டணி கட்சிகளாக மதிமுக மற்றும் விசிகவின் தலைவர்கள் கலந்து கொள்ளாதது பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொகுதிப் பங்கிடு முடியும் வரை திமுகவிடம் இருந்து தள்ளி இருப்பதே நல்லது என்று திருமா முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் வைகோவும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்கிற விஷயத்தில் அடக்கி வாசிக்க முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. தற்போது முதலே திமுகவுடன் ஒட்டி உறவாடினால் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எதிர்கொண்ட தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஒதுங்கியிருக்கும் டேக்டிக்ஸ் என்றும் சொல்கிறார்கள்.

click me!