
லைகா நிறுவனத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டிய தேவை தங்களுக்கு என்ன உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜியினியின் இலங்கை பயணம் ரத்தும், அதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் மீது லைகா நிறுவனம் முன்வைத்த கண்டத்தையும் நமது NEWS FAST ல் விரிவாக பதிவிட்டிருந்தோம்..
Click Here - http://www.newsfast.in/news/lyca-condemns-vaiko-thirumavalavan
இந்தச் சூழலில் லைகா நிறுவனத்தின் குற்றச்சாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் பேட்டி அளிக்கையில்,
"இலங்கைத் தமிழர்களின் அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகவே ரஜினி இலங்கை செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தோம். அரசியல் ஆதாயம் தேட சிங்கள ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதே தமிழ்மக்களின் அச்சம். லைகா தமிழ் மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்வதை குறைகூறவோ, எதிர்க்கவோ இல்லை."
"லைகா நிறுவனத்திற்கு எதிராகச் செயல்பட எங்களுக்கு என்ன தேவை இருக்கிறது?லைகா நிறுவனம் அப்படி நினைத்தால் அது வெறும் கற்பனையே, யூகமே.ரஜினி எதிர்ப்போ, வைகோ எதிர்ப்போ, அரசியல் ஆதாயமோ, விளம்பர நாட்டமோ நோக்கம் அல்ல. " இவ்வாறு தனது பேட்டியில் திருமாவளவன் தெரிவித்தார்.