திருமாவளவன் சாதியற்ற சமுதயத்தை உருவாக்க பாடுபடுகிறார்.. அவர் எங்கள் நட்பு சக்தி.. விசிகவை புகழந்த அண்ணாமலை.

By Ezhilarasan Babu  |  First Published Oct 25, 2022, 11:09 AM IST

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  


விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நல்ல சமுதாயத்தை உருவாக்க பாடுபடுகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை எதிர்க்கலாம் ஆனால் அவரும் சாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் பாடுபடுகிறார், ஆர்எஸ்எஸ்சும் அதற்குத்தான் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். சமீபகாலமாக பாஜகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மிடையே சித்தாந்த ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளது. அண்ணாமலை இவ்வாறு பேசியிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Latest Videos

தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென பாஜக பகிரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் திமுக மற்றும் அதன் கூட்டணிக்  கட்சிகளுடனான பாஜகவின் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சித்தாந்த ரீதியாக பாஜக ஆர்எஸ்எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக கட்சியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக திருமாவளவன் அவர்கள் இந்துக் கோயில்கள் குறித்து பேசியது மற்றும்  மனுதர்மத்தில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:  ஒரு தாய் பிள்ளையாய் பிணைந்து வாழ்கிறோம்! தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்க! ஜவாஹிருல்லா

அன்று முதல் இன்று வரை பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையேயான மோதல் காட்டமாகவே இருந்து வருகிறது. இதேபோல அம்பேத்கரின் பிறந்த நாள் அன்று மாலை போட சென்ற பாஜகவினர் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே சென்னை கோயம்பேட்டில் கைகலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அது வன்முறையாக மாறியது. அதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக பேசிய அண்ணல் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க பாஜகவிற்கு அருகதை இல்லை என திருமாவளவன் பேசினார். அப்போது அம்பேத்கர் குறித்து விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தயாரா என அண்ணாமலை சவால் விடுத்தார். இதனையடுத்து அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்தனர்.

திமுகவை காட்டிலும் தமிழகத்தில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் அரசியல் சக்தியாக திருமாவளவன் இருந்து வருகிறார். சில நேரங்களில் பாஜக விடுதலை சிறுத்தைகள் இடையே தனிமனித தாக்குதல்களும் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியுள்ள கருத்துக்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதில் அவர் திருமாவளவன் குறித்து பேசி கருத்து பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு..! கோவை குண்டு வெடிப்பை நினைவுபடுத்துகிறது- ஓபிஎஸ்

திருமாவளவன் அவர்களை  நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை, ஆர்எஸ்எஸ் குறித்து சில கடுமையான கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கிறார், சனாதனத்தை பற்றி கடுமையாக பேசி வருகிறார், இதே திருமாவளவன் அவர்கள் வேறுவேறு காலக்கட்டத்தில் வேறுவேறு கருத்துக்களைக் கூட முன்வைத்திருக்கிறார். அடிப்படையில் திருமாவளவன் அவர்கள் ஒரு நல்ல சமுதாயத்தை, சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபடுகிறார். அதன் முறைகளும் அர்த்தங்களும் வேண்டுமானால் மாறுபடலாம், ஆனால் பாஜகவும் அதைத்தான் விரும்புகிறது. திமுகவின் கூட்டணி கட்சியினரை நாங்கள் எதிரியாகவே பாவிக்கவில்லை, எங்கள் பக்கம் நீங்கள் வரக்கூடாது என்று நான் அவர்களை சொல்லவில்லை, நம் சேரக்கூடாது என்று சொல்லவில்லை.

திருமாவளவன் உள்ளிட்டவர்களை நட்பு சக்தியாகவே நான் பார்க்கிறேன், திருமாவளவன் அவர்களுக்கும் எங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மிகக்கடுமையாக பேசிக்கொள்கிறோம், ஆனாலும் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபடுகிறார். எங்கள் கட்சிகளிலும் கூட பட்டியல் இன தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட தலைவர்கள், வட இந்தியாவில் மிக கடுமையாக உழைக்கிறார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!