அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், நாட்டில் பல விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. என்.எல்.சியை விற்க முயற்சி செய்கின்றனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்கினார். பல தனியார் வங்கிகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியிலோ, அனைத்து அரசு சொத்துக்களும் தனியாருக்கு தற்போது விற்கப்படுகின்றது.
திடீரென மறைந்த திமுக முன்னோடி.. அதிர்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. கவலையில் உடன்பிறப்புகள்
இது தான் காங்கிரசுக்கும் பாஜாகவிற்கும் உள்ள வித்தியாசம். நான் காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை. இது தான் உண்மை நிலை. இடஒதுக்கீட்டுக்கு எதிராகதான் தனியார்மயத்தை முன்னிறுத்துகின்றனர். இடஒதுக்கீடு கோரிக்கைகளை எழுப்பக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றது. இதன் மூலம் எளிய மக்கள் கல்வி, வேலை பெறக்கூடாது என்ற நிலைப்பாடு தான் சனாதனம் என்று நாங்கள் குறிப்பிடுகின்றோம்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை கட்டணம் வசூலிக்கும் நிறுவனமாக்கி தனியாருக்கு ஒப்படைக்கும் உள்நோக்கத்துடன்தான் உயர்சிகிச்சைக்கு கட்டண முறையை அறிவித்துள்ளனர். ஏனெனில் அதானியின் சொத்துக்கள் அனைத்தும் மோடியின் சொத்துக்கள். உலக பணக்காரர்களில் மோடி மூன்றாவது இடத்தில் இருக்கின்றார் என்பது தான் அர்த்தம், அதானி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதித்திருந்தால் மோடியின் முகத்திரை கிழிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.