தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையென ஆளுநர் ரவி கூறியிருந்த நிலையில், 356வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலையுங்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையக தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆங்கில நாளேடுக்கு ஆளுநர் அளித்த பேட்டியில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறை, கோவையில் குண்டு வெடிப்பு போன்றவற்றை வன்முறை சம்பவங்களை சுட்டிகாட்டி பேசியிருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று விளக்கம் அளித்தார். அதில் கோவையில் சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்ட உடன் குற்றவாளிகளை கண்டுபிடித்ததாகவும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
திமுக ஆட்சியை கலையுங்கள்
இந்தநிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளுநர் கருத்து தொடர்பாக அதிமுக சார்பாக பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையென கூறியிருப்பது தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எதிர்கட்சி சொன்னா கூட பரவாயில்லை, ஆளுநரே சொல்லியுள்ளார்.அப்படியென்றால் எந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்பதை காட்டுவதாக தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களும், போதைப்பொருட்களும் சர்வ சாதரணமாக தமிழகம் வருவதாக தெரிவித்துள்ளார். தீவிரவாத்த்திற்கு ஆதரவாக உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். எனவே இதை சும்மா விட முடியுமா. எனவே ஆளுநர் சொல்வதோடு நிற்க கூடாது 356 வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்