திமுக கூட்டணியில் பாமகவுக்கு செக் வைத்த திருமாவளவன்... துரைமுருகன் பேச்செல்லாம் வீணாய் போச்சே..!

By Thiraviaraj RMFirst Published Feb 3, 2019, 11:46 AM IST
Highlights

திமுக கூட்டணியில் பாமகவை கொண்டு வர துரைமுருகன் எடுத்த முயற்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்ட முட்டுக்கட்டை பலனளித்து இருக்கிறது. 
 

திமுக கூட்டணியில் பாமகவை கொண்டு வர துரைமுருகன் எடுத்த முயற்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போட்ட முட்டுக்கட்டை பலனளித்து இருக்கிறது.

 

மதிமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்யும் எனக் கூறப்பட்டது. அதேவேளை திமுக பொருளாளர் துரை முருகன் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பெரும் முயற்சி செய்து வந்தார். பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள என்கிற நிலையில் திருமாவளவன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறும் என்பது வெறும் யூகம் தான். நிச்சயமாக திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பில்லை. பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? அமையாதா? என்பது அவர்களுக்குள் நடைபெறும் மவுனயுத்தம். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் அக்கட்சியின் மீதுள்ள அத்தனை வெறுப்பும் அதிமுக மீது திரும்பும் என்ற அச்சம் அதிமுக முன்னணி தலைவர்களிடம் உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது. இது நாள் வரை திமுகவுடன் கூட்டணிக்காக காத்திருந்த பாமக அடுத்த கூட்டணியை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒடு தொகுதியை திமுக ஒதுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட இருக்கிறார். அதற்காக தேர்தல் பணிகளை இப்போதே சிதம்பரம் தொகுதியில் வி.சி.க தொடங்கி விட்டது. 

click me!