சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த திருமா... விடுதலை சிறுத்தையை விரட்டி விரட்டி வெளுக்கும் அ.தி.மு.க...!

By Vishnu PriyaFirst Published Feb 25, 2019, 3:19 PM IST
Highlights

ராமதாஸ் எனக்கு செய்த துரோகம் சாதாரணமானதில்லை. என்னை பலிகடாவாக்கும் பாவத்துக்கு முயற்சித்தவர். பத்து சீட் கொடுத்தாலும் பா.ம.க. ஒண்டியிருக்கும் கூட்டணியில் நாங்கள் இணையமாட்டோம்!.... கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் வெளுத்தெடுத்துக் கொண்டிருந்தா திருமாவளவன்.

ராமதாஸ் எனக்கு செய்த துரோகம் சாதாரணமானதில்லை. என்னை பலிகடாவாக்கும் பாவத்துக்கு முயற்சித்தவர். பத்து சீட் கொடுத்தாலும் பா.ம.க. ஒண்டியிருக்கும் கூட்டணியில் நாங்கள் இணையமாட்டோம்!.... கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் வெளுத்தெடுத்துக் கொண்டிருந்தா திருமாவளவன். 

இந்த ஆத்திரத்துக்கு அடிப்படை காரணம் அச்சம்! அதாவது...’தாங்கள் நிற்கும் தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வந்துவிடவே கூடாது! என்பதால் ராமதாஸை திட்டிக் கொண்டே இருந்தார் திருமா. இது ஒருவகை அரசியல் தந்திரம்.’ என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் கொடுத்தார்கள். அது தந்திரமோ, மந்திரமோ திருமா நினைத்தது போலவே ராமதாஸ் தி.மு.க. பக்கம் வராமல் அ.தி.மு.க. கூட்டணிக்குள் சென்று செட்டிலாகிவிட்டார். 

இந்நிலையில், டெல்டா மண்ணில் வைத்து அ.தி.மு.க. கூட்டணியை டார்டாராக கிழித்திருக்கிறார் திருமா இப்படி...”தி.மு.க. அணியில் கொள்கை, புரிதல் எல்லாமே இருக்கிறது. ஆனால் மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் கட்சிகள் இருக்கும் கூட்டணியில் எதுவுமே இல்லை. சர்வாதிகாரமும், அடிமைத்தனமும் இணைந்த கூட்டணி அது. நாங்கள் சனாதனத்தை எதிர்க்கின்ற அணியாக உள்ளோம். ஆனால் அதுவோ பாசிச கூட்டணி. 

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால்...பா.ம.க.வை இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம் வெகுவாய் பலவீனமாகி இருக்கிறது அந்த கூட்டணி. அ.தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய சாபம்தான் பா.ம.க.வுடனான கூட்டு. பா.ம.க.வுடன் கைகோர்த்ததன் மூலம் தன் மதிப்பு, மரியாதையை இழந்து நிற்கிறது  தமிழகத்தை ஆளும் கட்சி. 

தன்னை கூட்டணியின் தலைவன்  என்று கூறிக்கொள்ளும் உரிமை, சுதந்திரம் கூட அ.தி.மு.க.வுக்கு இல்லாமல் போயிருக்கிறது. கேவலம். கூட்டணி தலைவனாக தன்னை சொல்லிக்க கூடாது என்று அமித்ஷா கட்டளையிட்டுள்ளார். இதன் மூலம் அடிமையாகிவிட்டது அ.தி.மு.க. உரிமையிலும், சுதந்திரத்திலும் சரிவை சந்தித்திருக்கும் அ.தி.மு.க., இந்த தேர்தலில் மக்கள் செல்வாக்கிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்து அதிகாரத்தை முழுமையாக இழக்கப்போகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையை அ.தி.மு.க.வுக்கு உருவாக்கிக் கொடுக்கிற பெருமை முழுக்க முழுக்க பா.ம.க.வை சாரும்.” என்று பொளந்திருக்கிறார். 

திருமா பேசியிருக்கும் பேச்சுக்காக அவரை திருப்பியடிக்க துவங்கியிருக்கும் அ.தி.மு.க. இணையதள அணி...”வெறும் ஒற்றை சீட்டுக்காக ஸ்டாலினின் சர்வாதிகாரத்தை சகித்துக் கொண்டிருக்கும் திருமாவளவனெல்லாம் சுதந்திரம், மரியாதையைப் பற்றிப் பேசலாமா? நாங்கள் பா.ம.க.வுக்கு ஏழு பிளஸ் ஒரு தொகுதியை அள்ளிக் கொடுத்திருக்கிறோம். முடிந்தால் தி.மு.க. கூட்டணியில் நீங்கள் வெறும் மூன்று தொகுதிகள் வாங்கிக் காட்டுங்கள். அப்போது ஒப்புக் கொள்கிறோம் நீங்க பிஸ்து!ன்னு.” என்று வெளுத்திருக்கிறார்கள். என்ன சொல்றீங்க திருமா?

click me!