கட்டப்பஞ்சாயத்து பண்றத பாத்தீங்களா? ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? தமிழிசைக்கு சவால் விடும் திருமாவளவன்!

 
Published : Oct 23, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
கட்டப்பஞ்சாயத்து பண்றத பாத்தீங்களா? ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? தமிழிசைக்கு சவால் விடும் திருமாவளவன்!

சுருக்கம்

Thirumavalavan questioning to Tamilisai

நான், எந்த இடத்திலாவது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டேன் என்பதை தமிழிசை சௌந்தரராஜன் ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா என்று தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது. தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல்,
திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து இடத்தை பிடுங்குபவர் திருமாவளவன் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார்.

தமிழிசையின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த தொல். திருமாவளவன், பாஜக நடவடிக்கைகளை தொடர்ந்து நான் அம்பலப்படுத்தி வருவதால் அவர் என் மீது எரிச்சல் அடைந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. தமிழகத்தில் வேறு எந்த தலைவர் மீதாவது இப்படி ஒரு அபாண்டமான பழியை சுமத்த முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எந்த இடத்திலாவது நான் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டேன் என்று இவர்களால் ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா என்றும் தொல். திருமாவளவன் கேட்டுள்ளார்.

தலைமை அலுவலகம் இயங்கும் இடம் சுத்த கிரயமாக வாங்கிய இடமாகும். பதிவுத் துறையில் அதற்கான கிரைய பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த அவதூறை தமிழிசை பரப்பி வருகிறார் என்றும், இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!