
நாளை சென்னை அம்பேத்கர் திடலில், மாலை -06 மணியளவில் மனுநீதி மனுதர்ம சாஸ்திரம் நூல் வெளியீட்டு விழாவை நடத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில். ‘’அவர்கள் 'மனுநீதி' எனும் நூலை, நாளை வெளியிடுவதாக சொல்வது மத ரீதியான பதட்டத்தை உருவாக்கி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க செய்யும் முயற்சி. தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த நிகழ்ச்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்’’ என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.