இபிஎஸ் போன் செய்தார்... திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேனா.? அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த திருமாவளவன்

By Ajmal Khan  |  First Published Oct 22, 2023, 7:17 AM IST

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதையடுத்து அதிமுக அமைக்கவுள்ள புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணையும் என தகவல் பரவிய நிலையில் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 
 


40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் சென்னை நந்தனம், ஓய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியக் கூட்டணியின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் முழுமையாக உழைப்போம்.

Tap to resize

Latest Videos

திருமாவளவன் வெற்றி பெற்று விட்டால் மட்டும் போதும் என்று இருக்கக் கூடாது 40 தொகுதியிலும் நமது கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும் அதற்குத் தான் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை  கூட்டம் . மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர கூடாது அதுவே நமது  சபதம் என தெரிவித்தார். 

இந்துக்கள் நாடு இந்தியா

இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் அதுவே பாஜகவின் நோக்கம்,  ஆனால் அதற்கு தடைக்கல்லாக இருப்பது அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டம் தான். கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக என அனைத்து கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாக இருக்கிறது, மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்று தான். பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு தாழ்வு பார்ப்பது தான் சனாதானம் இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்த பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிக-வின் கொள்கை. சனாதனத்தை பின்பற்றுவது தான் மனுஸ்ருதி அதற்கு எதிரானது தான் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம். 

அதிமுக கூட்டணியில் இணைகிறேனா.?

நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதனை பயன்படுத்தி சிலர் திமுகவை பலவீனமாக்குவதற்காக திருமாவளவன் திமுகவில் இருந்து விலகுவதாக வதந்திகளை பரப்பியதாக குற்றம்சாட்டினார். 

இதையும் படியுங்கள்

சந்திர பிரியங்கா அமைச்சரவைலிருந்து நீக்கப்பட்ட பிறகே ராஜினாமா செய்தார் - சபாநாயகர் விளக்கம்

click me!