திருமாவளவன் அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். ... பாஜக அண்ணாமலை பகீர்..!

By Thiraviaraj RMFirst Published Dec 6, 2021, 2:20 PM IST
Highlights

அம்பேத்கரின் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கட்சி திருமவாளவனுடைய கட்சி.

திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். மேளதாளங்கள் முழங்க, தீச்சுடர் ஏந்தி, சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், ‘’அம்பேத்கரின் கனவை நனவாக்கிவருவது பாஜகதான்... அம்பேத்கரின் சிந்தனை, புகழை வெளிக்கொண்டு வருவதும் பாஜகதான்... முதன் முதலாக ராம்நாத் கோவிந்தை, ஒரு பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை நாடினுடைய குடியரசு தலைவராக அமர்த்தி அழகு பார்த்த கட்சி பாஜக.  இதைப்போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக்காட்ட முடியும். 

பட்டியல் இன சமுதாய மக்களை முன்னேற்றுவதற்கான அரசு பாஜக அரசு. அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொறுப்புகளில் இவர்கள் உள்ளார்கள். கட்சியை வழிநடத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரும் இப்படிப்பட்ட அரசைதான் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார். எனினும், அம்பேத்கரின் முழு சித்தாந்தத்தையும் கொண்டு வர வேண்டும் என்றுதான் பாஜக அரசு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால்,தமிழகத்தில் திமுக அரசு வந்த இந்த 6 மாதத்தில் காவல்துறை அவலநிலைமை உள்ளிட்ட நிறைய விசயங்கள் தலை தூக்கியுள்ளது. குறிப்பாக,11 மணிக்கு மேல் எந்த சந்துகளுக்கு போனாலும் கஞ்சா விற்பதை காணலாம். 6 மாதத்தில் ஒரு அரசு இந்த அளவுக்கு நிர்வாக சீர்கேடு உடையதாக உள்ளதை நான் பார்த்தது கிடையாது. 

ஆனால் அம்பேத்கரின் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கட்சி திருமவாளவனுடைய கட்சி. குறிப்பாக ஜிஎஸ்டி பற்றி தெரியாமலேயே ஜிஎஸ்டி பற்றி ஐந்து வருடம் பேசியவர் அவர். ஆனால் அவர் மறுப்படியும் அண்ணல் அம்பேத்கர்ரின் வாழ்க்கை வரலாற்றை படித்து விட்டு வந்து பாஜகவை வந்து குற்றம் சாட்டச் சொலுங்கள் என திருமாவளவனை கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், தமிழக அரசின் எல்காட் மூலம் எதையும் வாங்காமல் அதிக விலை தந்து சந்தையில் பொருள் வாங்குகின்றனர். எல்காட் நிறுவனம் தேவையா? வேண்டாமா? என்று தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.   

click me!