Omicron: ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்ய ஏற்பாடு.. விமான நிலைய ஆணையகம் அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2021, 2:18 PM IST
Highlights

ரூ. 3400 கட்டணத்தில் 45 நிமிடங்களுக்குள் முடிவு வர கூடிய ராபிட் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை செய்ய ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

ஓமிக்கீரான் வைரஸ் பரவல் எதிரொலி ஒரே நேரத்தில் 800 பேர் வரை  பரிசோதனை செய்ய கருவிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையகம் தகவல் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட 12 நாடுகளில் ஒமிக்கிரான் வைரஸ் பரவல் காரணம் இந்த நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கபப்ட்டு உள்ளது. மேலும்  7 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்பட 14 நாட்கள் கண்காணிப்பில் இருக்க பயணிகளுக்கு உத்தரவிட்டப்பட்டு இருந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, பங்களாதேஷ், மொரீஷியஸ்,  போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய பன்னாட்டு விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வரும்வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகளை தங்கவைக்க வேண்டும். 

தொற்று இல்லை என்று முடிவு வந்ததால் விமான பயணிகள் வீடுகளில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதல் இருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்ட 7ம் நாள் முடிவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் எடுக்கப்பட்டு அதில் தொற்று இல்லை என முடிவு வந்த பின்னர் மேலும் 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில்  இருக்க வேண்டும் என மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியது. இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்ததால்  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய விமான நிலைய ஆணையகம் தனியாக இடவசதி செய்து உள்ளது. 500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உணவு வசதியும் செய்யப்பட்டு உள்ளன. ரூ.700 கட்டணத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு வர 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். 

ரூ. 3400 கட்டணத்தில் 45 நிமிடங்களுக்குள் முடிவு வர கூடிய ராபிட் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை செய்ய ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்ய மேம்படுத்தப்பட்டு உள்ளதாக விமான நிலைய ஆணையகம் தெரிவித்து உள்ளது. பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இலவசமாக கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் இணைப்பு விமானம் முலம் வேறு நகரங்களுக்கு செல்லக் கூடியவர்கள் என்ற தலவலை தெரிவித்தால் முன்னுரிமை அடிப்படையில் 20 முதல் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும். மேலும் விமான பயணிகளை ஸ்கிரீனிங் கருவி முலம் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

click me!