ஆந்திராவுக்கு தாவும் திருமா..? அங்கு எடுபடுமா ...? அரசியலில் அடுத்த திருப்பம்..!

By ezhil mozhiFirst Published Feb 19, 2019, 5:35 PM IST
Highlights

தமிழக அரசியல் வட்டாரத்தை தாண்டி, ஆந்திராவுக்கு தாவ தயாராகி  வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்.
 

தமிழக அரசியல் வட்டாரத்தை தாண்டி, ஆந்திராவுக்கு தாவ தயாராகி வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்.ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் நடைபெற்ற "தேசம் காப்போம் மாநாட்டில்" கலந்துகொண்ட திருமாவளவன் நிகழ்ச்சி முடிந்த உடன் செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது, "ஆந்திரா மாநிலத்தில் நடைப்பெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்...காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்...என அறிவித்து உள்ளார்.

தமிழகத்தை பொறுத்த வரை வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க  அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளது ? தொகுதி பங்கீடு என மிகவும் பிசியாக பரபரப்புடன் செல்கிறது அரசியல்.

விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரை, தமிழகத்தில் சிதம்பரத்தில் போட்டியிட திட்டம் வகுத்துள்ளார். அதே போன்று திமுக உடனான கூட்டணியில் 2 முதல் 3 தொகுதி வரை வேண்டும் என பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. விசிக தலைவர் திருமாவளவனுக்கு நோக்கமே எம்பி யாக வேண்டும்.. நாடாளுமன்றத்தில் நாட்டை பற்றி பேசியே ஆக வேண்டும் என  காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த தருணத்தில் இன்று அதிமுக பாமக கூட்டணி உறுதியானதை  அடுத்து, திமுக வில் திருமாவிற்கு கூடுதல் பலன் கிடைக்கும் என  கூறப்படுகிறது. ஆக கொஞ்சம் டிமாண்ட் அதிகரித்தால் 3 தொகுதி கேட்க வாய்ப்பு உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தான், அலேக்கா ஆந்திரா பக்கம் தாவ உள்ளார் திருமாவளவன். அதாவது ஆந்திராவில் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் விசிக போட்டியிடும் என்று... செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். தமிழகத்தில் யாருடன் கூட்டணி ? எத்தனை தொகுதி கிடைக்கும் என  உறுதியாவதற்கு முன் ஆந்திரா பக்கம் திரும்பி உள்ள திருமா பற்றிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடுத்த ஹாட் டாப்பிக்காக உள்ளது.

click me!