ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். மேல்முறையீடு மனுவாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று பொறுப்பு தலைமை நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும 51 இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. அதற்கான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார். அதாவது செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வளம் நடத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: சென்னையில் எம்ஜிஆர் சிலையின் மூக்கை உடைத்த மர்ம நபர்கள்.! குற்றவாளிகள் மீது நடவடிக்கை.?களத்தில் குதித்த ஓபிஎஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பல அரசியல் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் உத்தரவை விமர்சித்து வருகின்றனர், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பேரணி நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதில் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் பிரித்தாலும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்க கூடாது,
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் பதவி கொடுத்ததால் பண்ருட்டி ராமசந்திரனை அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் தொண்டர்கள்
விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கருக்கு, அவரசு கொள்கைகளுக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்திரிக்கப் முயற்சிகள் நடக்கிறது, எனவே ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, எனவே இந்த மனுவை அவசர வழக்காக இன்றோ அல்லது நாளைக்குள் விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் சார்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர வழக்கு முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிடப்பட்ட இந்த வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது, இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
எனது இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று மறுத்துவிட்டார், மனுவை எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுரை வழங்கினார். தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், திருமாவளவன் தரப்பினர் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா டி.கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்தனர். ஆனால் அவர்களும் திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்கள் என அறிவுரை வழங்கினார்.