பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிவதா.? ஈவிரக்கமற்ற மோடி, எடப்பாடி அரசு என திருமா அட்டாக்!

Published : Jun 14, 2020, 08:35 PM IST
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிவதா.? ஈவிரக்கமற்ற மோடி, எடப்பாடி அரசு என திருமா அட்டாக்!

சுருக்கம்

பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்துகிற நடைமுறையைத் தமிழக அரசு இப்போது கடைபிடித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் லிட்டருக்கு சுமார் ஐந்து ரூபாய் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. கொரோனா பேரிடர் நேரத்தில் மக்களை கசக்கிப் பிழியும் விதமாக இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறோம்.  

ஈவிரக்கமற்ற அரசாக மத்திய அரசும் அதற்கு ஏற்ப தாளம் போடும் அரசாக தமிழக அரசும் இருந்து வருகிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்துகிற நடைமுறையைத் தமிழக அரசு இப்போது கடைபிடித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் லிட்டருக்கு சுமார் ஐந்து ரூபாய் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. கொரோனா பேரிடர் நேரத்தில் மக்களை கசக்கிப் பிழியும் விதமாக இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறோம்.

மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான எக்சைஸ் வரியை உயர்த்தி வருகிறார். இதனால் ஆண்டொன்றுக்கு இரண்டரை லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை மத்திய அரசுக்கு வருவாய் வருகிறது. அந்த வருவாயைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்கள் எதையும் மத்திய அரசு செயல்படுத்துவதில்லை. மாறாக இதையெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பேரிடர் காலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கோ புலம்பெயர் தொழிலாளர்களுக்கோ எந்த ஒரு நிவாரணத்தையும் மோடி அரசு அளிக்கவில்லை. இதனால் மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வறுமையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது மோடி அரசு. மத்திய அரசு மார்ச் மாதத்தில் எக்சைஸ் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது.மே மாதத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் எக்சைஸ் வரி உயர்த்தப்பட்டது.
உலகில் எந்த ஒரு நாடும் தனது குடிமக்களை இந்தப் பேரிடர் காலத்தில் இப்படி கொடுமைப்படுத்தவில்லை. ஈவிரக்கமற்ற அரசாக மத்திய அரசும் அதற்கு ஏற்ப தாளம் போடும் அரசாக தமிழக அரசும் இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்க முடியாதபடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மக்கள் விரோத விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுக்க முடியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!