திருமா 5 ஸ்டார் ஹோட்டலில் கூட தங்கி இருக்கலாம்... கொதிக்கும் வன்னியரசு..!

By Thiraviaraj RMFirst Published Nov 30, 2021, 6:32 PM IST
Highlights

தமிழகமே மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது டிப்டாப் உடை அணிந்து காலில் ஷூ மாட்டி வீட்டை விட்டு வெளியே வந்து துளியு,ம் நணையாமல் காரில் ஏறி டாட்டா காட்டி சென்ற வீடியோ  வைரலாகியது. 
 

விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் சேரில் ஏறி காரில் சென்றது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. சனாதனம் பேசும் அவர் இப்படி ஆதிக்கமாக நடந்து கொள்ளலாமா? என்கிற வாதம் முன் வைக்கப்படுகிறது. 

இதற்கெல்லாம் காரணம், அவர் தண்ணீரில் மூழ்கிய இருக்கையில் இருந்து நடந்து வருகிறார். அவரை தாங்க பல தொண்டர்கள் மிதக்கும் தண்ணீரிலும் அந்த இருக்கைகளை இழுத்துப்போட்டு காரில் கரை சேர்க்கிறார்கள். அந்த அளவு தண்ணீரில் அவர் சென்ற இடம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பது. தமிழகமே மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது டிப்டாப் உடை அணிந்து காலில் ஷூ மாட்டி வீட்டை விட்டு வெளியே வந்து துளியு,ம் நணையாமல் காரில் ஏறி டாட்டா காட்டி சென்ற வீடியோ  வைரலாகியது. 

இதுகுறித்து விளக்களித்துள்ள விசிக நிர்வாகிகள், ‘’ அண்ணன் வீட்டை விட்டு கிளம்பும்போது, முழங்கால் அளவுக்கு தரை தளம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதைப் பார்த்து திகைத்து விட்டார். அதனை கண்ட நாங்கள் அவரை எங்களது தோளில் தூக்கி செல்கிறோம் என்று தெரிவித்தோம்.

ஆனாளும் அண்ணன் அதனை ஏற்கவில்லை. அண்ணனுக்கு ஏதாவது ஆகி விடக்கூடாது என மருகிய நாங்கள், அங்கே இருந்த சில இரும்பு நாற்காலிகளை ஒன்றாக கோர்த்து வைத்தோம். காத்திருப்பவர்கள் அமர்வதற்காக இது போன்ற நாற்காலிகள் அங்கு இருந்தது. அந்த நாற்காலிகளை பயன்படுத்தி திருமாவளவன் மீது தண்ணீர் படாமல் அழைத்துவர முயற்சி செய்த தொண்டர்கள் அதன் மீது திருமாவளவனை ஏறுமாறு கூறினார். திருமாவளவனும் ஏறி நின்றார். அந்த இரும்பு நாற்காலியை தொண்டர்கள் தள்ளிக் கொண்டே வந்தார்கள் பிறகு கார் நிற்கும் இடம் வரை அந்த நாற்காலியில் திருமாவளவன் நின்றுகொண்டே வந்தார். இதையடுத்து திருமாவளவன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை பலர் விமர்சித்தும் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்,இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் திருமாவளவன், கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும். ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.


ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார். முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள். இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!