​ஷூ நணையாமல் தூக்கிட்டு போயிட்டாங்க... அவர் பிரச்னை உங்களுக்கு தெரியுமா..? #திருமாவை_கொண்டாடுவோம் விசிக..!

Published : Nov 30, 2021, 04:24 PM ISTUpdated : Nov 30, 2021, 04:25 PM IST
​ஷூ நணையாமல் தூக்கிட்டு போயிட்டாங்க...  அவர் பிரச்னை உங்களுக்கு தெரியுமா..? #திருமாவை_கொண்டாடுவோம் விசிக..!

சுருக்கம்

திருமாவளவன் மழைநீரில் காலனி நனையாமல் இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவரை இருக்கையின் மீது ஏற்றி காருக்குள் அனுப்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சென்னை மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.  சாலைகள் குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மழைநீரில் காலனி நனையாமல் இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவரை இருக்கையின் மீது ஏற்றி காருக்குள் அனுப்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருந்து டெல்லி புறப்பட  தயாராக இருந்த நிலையில் அவரது வீட்டை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

 அப்போது அக்கட்சி தொண்டர்கள் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மீது அவரை ஏற்றி நடக்க வைத்து பின்னர் காருக்குள் அனுப்பினார். இதற்கான வீடியோ அக்காட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ பார்த்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மழை தண்ணீரில் கூட இறங்கி நடக்க  தயங்குபவர்கள் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும் என்றும், அவர் இருக்கையில் ஏறி நிற்க தொண்டர்கள் அவரை  தண்ணீரில் நின்றபடி தாங்கி செல்கின்றனர். இது ஒருவிதமான எதேச்சதிகாரம், இதுதான் சமூக நீதியா என்றெல்லாம் அவரை விமர்சித்தனர். 

தற்போது இது விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், #திருமாவை_கொண்டாடுவோம் என்கிற ஹேஸ்டேக் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு