அன்புமணி ஆட்சியை பிடிக்க நினைப்பது முட்டாள்தனத்தின் உச்சம்!: வெறுப்பை உமிழும் அ.தி.மு.க! டமாலாகும் கூட்டணி?

By Vishnu PriyaFirst Published Jan 27, 2020, 6:18 PM IST
Highlights

ஒரு கூட்டணி உருவாவதற்குதான் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவை. ஆனால் அக்கூட்டணி உடைவதற்கு ஜஸ்ட் ஒரேயொரு வார்த்தை போதும். வடிவேலு பாணியில் சொல்வதானால் ‘பொரி உருண்டை சைஸுல ஒரேயொரு பாம், டோட்டல் பில்டிங்கும் குளோஸ்!’. இதுதான் யதார்த்தம். 
 

ஒரு கூட்டணி உருவாவதற்குதான் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவை. ஆனால் அக்கூட்டணி உடைவதற்கு ஜஸ்ட் ஒரேயொரு வார்த்தை போதும். வடிவேலு பாணியில் சொல்வதானால் ‘பொரி உருண்டை சைஸுல ஒரேயொரு பாம், டோட்டல் பில்டிங்கும் குளோஸ்!’. இதுதான் யதார்த்தம். 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது அசாதாரணமான சூழ்நிலை. குறிப்பாக தி.மு.க.வின் மிக கடுமையான விமர்சனம், மீடியாக்களின் துளைத்தெடுத்த விமர்சன கேள்விகள் இவற்றையெல்லாம் கடந்துதன் பா.ம.க. அந்த கூட்டணியில் அங்கம் வகித்தது. ஆனால் அதன் மூலம் பா.ம.க. பெற்றது ‘அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட்’ மட்டுமே. 

ஆனால் அதே அன்புமணியே இப்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வேலையை துவக்கிவிட்டார் என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்து. தங்கள் கட்சியின் முப்படை ஆலோசனை விழாவில் பேசிய அவர் ‘2021ல் பா.ம.க. ஆட்சியைமைக்கும்’ என அவர் பேசியது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. என அக்கூட்டணியின் இரு பெரும் தலைகளையும் உதாசீனப்படுத்துவதாக அமைந்தது.

அன்புமணியின் இந்த ஆர்வமிகு பேச்சோடு முடிந்துவிடவில்லை விஷயம். அன்புமணியின் திறமைகள், அவரது தொலைநோக்கு திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி பிட்நோட்டீஸ் அடித்து வினியோகிக்கும் அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறது பா.ம.க.வின் முயற்சி. இதுதான் அ.தி.மு.க.வை ஏகத்துக்கும் உசுப்பேற்றியுள்ளது. இது போதாதென்று ’எங்களுக்கு எண்பத்தைந்து, தொண்ணூறு தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியாக வேண்டும். குறைந்தது அறுபதாவது தந்தால்தான் நாங்கள் சமாதானமடைய வாய்ப்புள்ளது!’  என்று இப்போதே வலையை விரிக்க துவங்கிவிட்டது பா.ம.க. தரப்பு. 

இது அ.தி.மு.க.வை ரொம்பவே சூடாக்கிவிட்டது. இந்த நிலையில் அன்புமணி தலைமையில் கூட்டணிக்கு பா.ம.க. குடைச்சல் கொடுப்பதை பற்றி பேசும் அ.தி.மு.க.வினர் “பா.ம.க. தனது சமீப கால அரசியல் பலத்தை பட்டியலிட்டு பார்க்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கொடுத்த அத்தனை தொகுதிகளிலும் தோற்றனர். அன்புமணி எம்.பி.யாக இருந்த  தர்மபுரியில் கூட அடிதான் கிடைத்தது அக்கட்சிக்கு. 

சூழ்நிலை இப்படியிருக்கையில் வெறும் எண்பத்தாறு தொகுதிகளை மட்டும் தேர்வு செய்து வைத்துக் கொண்டு, அதில் போட்டியிட்டு ஜெயித்து ஆட்சியை பிடிப்போம்! என்று சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம். அவர்கள் தேர்வு செய்திருக்கும் எண்பத்தாறு தொகுதிகளில் அதிகபட்சம் 40 வரை நாங்கள் கொடுக்க வாய்ப்புள்ளது.” என்று சொல்லியுள்ளனர் நறுக்கென்று. 

இதற்கு பதிலடி தரும் பா.ம.க.வோ ’முட்டாள்கள் யார் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் சாமர்த்தியமான திட்டங்களின் மூலம் முழு வன்னியர் வாக்கு வங்கியையும் எங்கள்  கரங்களுக்குள் கொண்டு வந்துவிட்டார் அன்புமணி. வன்னியர் விரும்பும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். அப்போது புரியும் அன்புமணியின் செல்வாக்கும், அறிவின் உச்சமும்!” என்கின்றனர். 

இப்படியே போயிட்டு இருந்துச்சுன்னா கூட்டணி டமால்தான் போல! என்பதே அரசியல் விமர்சகர்களின்  கருத்து. 
சர்தான்!

click me!