தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் உடல்நலக்குறைவால் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..!

By vinoth kumarFirst Published Aug 8, 2021, 9:51 AM IST
Highlights

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 1984 வரை தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திண்டிவனம் ராமமூர்த்தி தனிக் கட்சி ஆரம்பித்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால், சில மாத்தில் தனது தனிக் கட்சியை கலைத்துவிட்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

அவருக்கு தமிழக பிரிவின் தலைவர் பதவியைத் சரத்பவார் வழங்கினார். அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது. 

இந்நிலையில், 87 வயதான திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!