பாஜகவின் அடுத்த யாத்திரை தயார்... கொங்கு மண்டலத்தில் ஆசிர்வாத யாத்திரை.. பாஜக அதிரடி திட்டம்.!

By Asianet TamilFirst Published Aug 7, 2021, 9:10 PM IST
Highlights

வேல் யாத்திரையைத் தொடர்ந்து தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் ஆசிர்வாத யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
 

தமிழக பாஜக சார்பில் கடந்த ஆண்டு வேல் யாத்திரை நடத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தி இந்த யாத்திரையை பாஜக முன்னெடுத்தது. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் 15-க்குள் நடைபெற உள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில் வேல் யாத்திரையைப் போல மீண்டும் ஒரு யாத்திரையை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு ‘ஆசிர்வாத் யாத்ரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த யாத்திரையில் பங்கேற்கும் தலைவர்கள் குறித்தும் பாஜக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யாத்திரையைத் சுதந்திர தினத்துக்குப் பிறகு கொங்கு மண்டலமான நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகியப் பகுதிகளில்  கொங்கு மண்டல பகுதிகளில் இந்த யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அன்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ள அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவின்  செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வந்த பிறகு ஆசிர்வாத யாத்திரை குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

click me!