ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே அது என்னவாயிற்று என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிக கடன் பெற்றுள்ள மாநிலங்களின் புள்ளி விபரங்கள் அடங்கிய பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தின் கடன் அளவு கடந்த பல ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டில் தமிழகம் பின்னோக்கி சென்றுள்ளதற்கு, ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.
உற்பத்தித் துறையில் தமிழகம் அழிவின் விளிம்பிற்கே சென்று விட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.
2016 – 2017 ஆம் ஆண்டு தமிழகம் எப்போதும் இல்லாத அளவுக்கு 1 புள்ளி 65 சதவீத வளர்ச்சியே அடைந்துள்ளதாக தெரிவித்தார்..
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே அது என்னவாயிற்று என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழில் நசிவு, வேலையின்மை போன்றவற்றில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுக் கொண்டார்.