தேவர் ஜெயந்தி !! மதுரை பிரமாண்ட தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை !!

By Selvanayagam PFirst Published Oct 30, 2019, 9:53 AM IST
Highlights

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பிரமாண்ட தேவர் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 
 

கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா 28, 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது. 

தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவுக்கு தமிழக முதலமைச்சர் , துணை முதலமைச்சர்  அமைச்சர்கள், தமிழக, தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால், சுமார் பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென்மண்டல காவல்துறை ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில், 7 டிஐஜிக்கள், 22 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 95 சிசிடிவி கேமராக்கள், 2 ஆள் இல்லா விமானங்கள், குற்றவாளிகளைக் கண்டறியும் ஃபேஸ் ட்ராக்கர் முறை என அதிநவீன தொழில்நுட்பங்களையும் காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதே போல் தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

click me!