
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக களமிறங்கும் மதுசூதனன் அணி அணியாக ஆதரவை திரட்டி வருவதால் ஒ.பி.எஸ் அணியின் பலம் வலுத்து கொண்டே போகிறது.
ஆர்.கே.நகர் கிருஸ்தவ பேரவையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் மதுசூதனன் முன்னிலையில் ஒ.பி.எஸ் அணியில் இணைந்தனர்.
அதிமுக இரண்டாக உடைந்தமையால் சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் பலமுனை போட்டி நிகழ்ந்தாலும் மற்ற கட்சிகள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. தற்போது டி.டி.விக்கும் மதுசூதனனுக்கும் தான் போட்டி வலுத்து வருகிறது.
இதுகுறித்த விசாரணைக்கு இருதரப்பும் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று உண்மையான அதிமுக நாங்கள் தான் எனவும், அதிமுகவினரின் ஆதரவு எங்கள் பக்கமே இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மதுசூதனன்.
ஏற்கனவே தீபா பேரவையில் இருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இராயபுரம் எம் எம் கோபி தலைமையில் கிருஸ்தவ பேரவையை சேர்ந்த ஆர் கே நகர் தொகுதி முக்கிய நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் வேட்பாளர் மதுசூதனன் முன்னிலையில் அதிமுக பன்னீர்செல்வம் அணியில் இன்று இணைந்தனர்.
இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ், ஆர் எஸ் ஜெனார்த்தனம், டைகர் டி.தயாநிதி, மற்றும் மாசிலாமணி, கருணாமோசஸ், சாமுவேல், மகளீரணி சாரல், மாத்யு, ஜேம்ஸ், சுதாகர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.