தமிழகத்தில் அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இருக்கணும்... அண்ணாமலை அதிரடி கருத்து.!

By Asianet TamilFirst Published Aug 22, 2021, 8:52 PM IST
Highlights

தமிழகத்தில் அதிகமான நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தால்தான் மக்கள் எளிதில் அவர்களை அணுக முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  கருத்து தெரிவித்துள்ளார்.
 

தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இல.கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இல.கணேசன் என்னை போன்ற அரசியல்வாதிகளை செதுக்கக்கூடியவர். என்னுடைய அரசியல் ஆசான் இல.கணேசன். நாடாளுமன்றத்தின் மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருப்பது, தமிழ்நாட்டுக்கு நல்லது. 1961-க்குப் பிறகு தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை 41லிருந்து 39 ஆக குறைந்தது பற்றி உரிய விளக்கத்தை பாஜக நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.
அதிகமான நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தால்தான் மக்கள் எளிதில் அவர்களை அணுக முடியும். பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழ்நாட்டில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் சமமாக வளர்ச்சியைக் கொண்டுசெல்ல தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.  இதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு இல்லை” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
 

click me!