சுவர்களிலா ஊசி போட்டார்கள்? கே.பி.பார்க் நிறுவத்திற்கு நகைச்சுவையாக பதிலடி கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு.!

By vinoth kumarFirst Published Aug 22, 2021, 8:00 PM IST
Highlights

மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு 15 வாகனங்கள் மூலம் தடுப்பூசி போட இருப்பதாக கூறினார். தேவைப்பட்டால் ரோட்டரி கிளப் மூலம் இன்னும் வாகனங்களை அதிகரித்து தடுப்பூசி போடப்படும் என்றார். 

மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு 15 வாகனங்கள் மூலம் 80வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னையில் 80வயதிற்கு மேற்பட்டவர்கள், மொத்தமாக ஒரு லட்சத்து 60ஆயிரம் பேர் இருக்கும் நிலையில், அதில் 90 ஆயிரம் பேர் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 80வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் வாகனத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு;- மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு 15 வாகனங்கள் மூலம் தடுப்பூசி போட இருப்பதாக கூறினார். தேவைப்பட்டால் ரோட்டரி கிளப் மூலம் இன்னும் வாகனங்களை அதிகரித்து தடுப்பூசி போடப்படும் என்றார். 

மேலும், சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை சென்னை மாநகராட்சி கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்திய போது தான் சேதாரம் ஏற்பட்டதாக ஒப்பந்ததாரர் கூறியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், சுவர்களிலா ஊசி போட்டார்கள்? என நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

click me!