அதிகாலை வீடு புகுந்து செங்கோட்டையன் வலதுகரத்தை அலேக்கா தூக்கிய போலீசார்.. 15 நாள் சிறை..!

Published : Aug 22, 2021, 06:55 PM ISTUpdated : Aug 22, 2021, 06:56 PM IST
அதிகாலை வீடு புகுந்து செங்கோட்டையன் வலதுகரத்தை அலேக்கா தூக்கிய போலீசார்.. 15 நாள் சிறை..!

சுருக்கம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பி என்கிற சுப்ரமணியம் செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார்.

கொலை மிரட்டல் வழக்கில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்ரமணியத்தை இன்று அதிகாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பி என்கிற சுப்ரமணியம் செயல்பட்டு வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கோபி அருகே உள்ள வெள்ளகோயில்பாளையத்தில் கடந்த 14ம் தேதி தடுப்பூசி முகாம் நடந்தது. இம்முகாமில் சுப்ரமணியம் தனதுஆதரவாளர்களுடன் தடுப்பூசி போட காத்திருந்தவர்களுக்கு கூட்டமாக சென்று பிஸ்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கி கொண்டிருந்தார். 

அப்போது, இளங்கோ என்பவர் கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு உள்ள நிலையில் இது போன்று கூட்டமாக முக கவசம் அணியாமல் செயல்படலாமா? என்று கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுப்ரமணியம், இளங்கோவை தகாத வார்த்தையில் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். 

இதுகுறித்து இளங்கோ அளித்த புகாரின் பேரில் போலீசார்  கடந்த 14ம் தேதி சுப்ரமணியத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்