ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Nov 20, 2022, 7:28 AM IST

அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவுடன் தான் கூட்டணி, கூட்டணியை முறித்திக் கொள்ள ஒரு காரணம் கூட இல்லையென ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.


அதிமுக ஒற்றை தலைமை மோதல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து  2022 ஆம் ஆண்டு  ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.  என அடுத்தடுத்து பிளவுகளால் அதிமுகவின் தேர்தல் வெற்றிகள் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் அதிமுகவின் தொண்டர்கள் என்ன செய்வது என்று கூட தெரியாமல் திகைத்து நிற்கக்கூடிய நிலை தான் தற்போது உருவாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் என ஓ.பன்னீர் செல்வமும், இடைக்கால பொதுச்செயலாளர் தான் தான் என இபிஎஸ்ம் கூறிவருகின்றனர். இந்தநிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வரவேற்ற நிலையில் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் சென்ற நிலையில் இபிஎஸ் செல்லாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த விஷயமாக சென்னை வந்தவரை சந்திக்க வேண்டிய தேவையில்லையென கூறினார். இதன் காரணமாக பாஜக மீது இபிஎஸ் அதிருப்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இபிஎஸ் அணியின் ஐடி பிரிவினர் பாஜகவை விமர்சித்து தங்களது கருத்துகளை சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த  ஒபிஎஸ் ஆதரவாளரும் கொள்கை பரப்பு செயலாளருமான மருது அழகுராஜ் கூறுகையில், அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவுடன் தான் கூட்டணி, கூட்டணியை முறுத்திக் கொள்ள ஒரு காரணம் கூட இல்லையென கூறினார். 

திமுக அரசை திடீரென பாராட்டிய டி.டி.வி தினகரன்.. என்ன காரணம் தெரியுமா?

அமித்ஷாவை டெல்லியில் சென்று கடந்த மாதம் தான் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார் . ஆனால் தற்போது ஒரே மாதத்தில் அமித் ஷா மீது கோபம் ஏற்பட்டதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஐடி பிரிவினர்  பாஜகவை திட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் பாஜகவிற்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஆனால் இது நியாயம் இல்லை என மருது அழகுராஜ்  குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

click me!